உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / இடுபாடுகளுக்குள் சிக்கிய டிரைவரை மீட்ட பொதுமக்கள் | Dindigul | Private bus lorry head-on collision

இடுபாடுகளுக்குள் சிக்கிய டிரைவரை மீட்ட பொதுமக்கள் | Dindigul | Private bus lorry head-on collision

இடுபாடுகளுக்குள் சிக்கிய டிரைவரை மீட்ட பொதுமக்கள் | Dindigul | Private bus lorry head-on collision திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரூர் டூ திண்டுக்கல் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அதே போல் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சிமென்ட் ஏற்றி வந்த லாரி எதிரே வந்து கொண்டிருந்தது. தனியார் பஸ் முன்னாள் சென்ற வாகனத்தை ஓவர் டேக் செய்த போது எதிரே வ்ந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்து 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்தில் பஸ் டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு குஜிலியம்பாறை அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த டிரைவர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து நடந்த பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படித்தினர்.

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை