காலாவதியான அரசு மருந்து மாத்திரைகள் பறிமுதல் | Kodaikanal | A mother and son who were providing
காலாவதியான அரசு மருந்து மாத்திரைகள் பறிமுதல் | Kodaikanal | A mother and son who were providing medical treatment திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலைக்கிராமங்களில் ஒன்றான கவுஞ்சியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பிரின்ஸ் மற்றும் அவரது தாயார் பேபி இருவரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்பதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பாரதிக்கு தகவல் கிடைத்தது. இணை இயக்குனர் பாரதி தலைமையில் மருத்துவர்கள் திடீரென கவுஞ்சி கிராமத்தில் உள்ள பிரின்ஸ் வீட்டில் சோதனை செய்தனர். காலாவதியான மற்றும் அரசு மருந்து மாத்திரைகள் இருந்தது. காலாவதியான மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பது மாத்திரைகள் வழங்குவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர். மருந்துகள் லேப்புகளுக்கு அனுப்பி சோதனை செய்த பின் தாய் மற்றும் மகன் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர்.