உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மலைவாழ் மக்களை தேடி சென்று வாங்கும் டூரிஸ்ட்கள் | Medicinal Bamboo Pulp | Kodaikanal

மலைவாழ் மக்களை தேடி சென்று வாங்கும் டூரிஸ்ட்கள் | Medicinal Bamboo Pulp | Kodaikanal

கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட கடமன் ரேவு பகுதியில் மருத்துவ குணமிக்க மூங்கில் குருத்துகளை மலைவாழ் மக்கள் விற்பனை செய்கின்றனர். காட்டு யானைகள் விரும்பி உண்ணும் மூங்கில் குருத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள், ஆஸ்துமா, இருமல், பித்தப்பை போன்ற வியாதிகளுக்கு மூங்கில் குருத்துக்கள் அருமருந்தாக பயன்படுகிறது. மேலும் ரத்த அழுத்த நோயாளிகள் மூங்கில் குருத்தை உணவில் சேர்த்து வர ரத்த அழுத்தம் சீராகும் என்பது அனுபவபூர்வமானது. ஏராளமான வைட்டமின்கள் அடங்கியுள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் இது உதவுகிறது. மூங்கில் குருத்துக்களை ஊறுகாய் செய்தும் சாப்பிடுகின்றனர். கடமன் ரேவு பகுதியில் வசிக்கும் பளியர் மலைவாழ் மக்களிடம் மூங்கில் குருத்துக்கள் கிடைக்கிறது. மூங்கில் குருத்தை வாழைத்தண்டு பொரியல், குழம்பு, சாம்பார் வைத்து சாப்பிடலாம். கைகால் வலிக்கு மிக சிறந்த நிவாரணியாகவும் உள்ளது. இவற்றை மலைவாசிகள் விவசாய நிலங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று சேகரித்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதன் மருத்துவ குணம் அறிந்த டூரிஸ்டகள் மலைவாசிகளை தேடி சென்று மூங்கில் குருத்துக்களை அதிகளவு வாங்கி செல்கின்றனர்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி