இந்தியாவிலேயே முதல் முறையாக திண்டுக்கல்லில் வேட்டை வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி
ந்தியாவிலேயே முதல் முறையாக திண்டுக்கல்லில் வேட்டை வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி | National Archery competition | Dindigul இந்தியாவிலேயே முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் பி எஸ் எஸ் மல்டி ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக இயற்கை சூழலுக்கு ஏற்ப, தீங்கு விளைவிக்காத வகையில் தேசிய வேட்டை வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியை மாமதுரையர் மற்றும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கம் மாநில தலைவர் திருமுருகன் தொடங்கி வைத்தார். இதில் நாடு முழுவதிலும் இருந்து 56 முன்னணி வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற வில்வித்தை வீரர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட வில் விளையாட்டு சங்க செயலாளர் ராஜா, பொதுச்செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு வில் விளையாட்டு சங்கம் போட்டி இயக்குனர் மணிவாசகம், மாமதுரையர் இயக்கத்தின் நிறுவனர் முத்து, உறுப்பினர்கள் காசிராஜன், சந்துரு, வெள்ளிமலை மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.