இறந்தவர் உடலை தோளில் துாக்கிச் செல்லும் அவலம் | No Basic Fecility | Tiruvalluvar Nagar | Kodaikanal
இறந்தவர் உடலை தோளில் துாக்கிச் செல்லும் அவலம் | No Basic Fecility | Tiruvalluvar Nagar | Kodaikanal கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டில் திருவள்ளுவர் நகர் உள்ளது. இங்கு 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் கூலி தொழிலாளர்கள். கடந்த 40 வருடத்திற்கும் மேலாக கரடு முரடான காட்டு வழியை பயன்படுத்தி வருகின்றனர். ஒற்றையடி பாதையில் கற்கள், பாறைகளில் ஏறி சென்று மிகுந்த சிரமம் அடைகின்றனர். சாலை வசதியை ஏற்படுத்தித் தரக்கோரி நகராட்சியிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் பயனில்லை. கரடு முரடான காட்ட வழியில் செல்ல முடியாமல் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களின் உடலை பொதுமக்களின் உதவியுடன் தோளில் சுமந்து சென்று பிரதான ரோட்டிற்கு கொண்டு வருகின்றனர். அதிகாரிகள், அரசியல்வாதிகள் பெயரளவுக்கு மட்டுமே ஆய்வு செய்கின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்டோர் வாழ்வாதாரம் கருதி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என குடியிருப்பு வாசதிகள் வலியுறுத்தினர்.