திண்டுக்கல் மாவட்ட போலீசார் திருடர்களை பிடிக்க தீவிரம்
திண்டுக்கல் மாவட்ட போலீசார் திருடர்களை பிடிக்க தீவிரம் Pattiveeranpatti #TempleTheft CCTVFootage திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையத்தில் உள்ள 2 கோயில்களில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர். சின்ன அய்யம்பாளையம் அரசமர பேருந்து நிறுத்தம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோயில் மற்றும் கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோயில்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோயில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக்கொண்டு உண்டியல் திருடன்களை தேடி வருகின்றனர். பைட் பாலசுப்ரமணி நிர்வாகி, கொடுமுடி தீர்த்தக்காவடி சங்க முருகன் கோயில்
மார் 24, 2026