காயமடைந்த டூரிஸ்ட் மற்றும் வியாபாரி ஆஸ்பிடலில் அட்மிட் | Kodaikanal | Pillar Rock traders | Injured
காயமடைந்த டூரிஸ்ட் மற்றும் வியாபாரி ஆஸ்பிடலில் அட்மிட் | Kodaikanal | Pillar Rock traders | Injured Tourist and Trader கொடைக்கானல் பில்லர் ராக் பகுதியில் ஆண்டு தோறும் செபஸ்தியார் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதில் பங்கேற்கும் டூரிஸ்டுகள், பொதுமக்களுக்கு சிறு வியாபாரிகள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு விழா நடத்த வனக்குழு தலைவரிடம் அனுமதி பெற்று விழா ஏற்பாட்டாளர்கள் விழாவை நடத்தினர். அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா சமைத்த உணவு மற்றும் தண்ணீர் கேன்களை எட்டி உதைத்து விழா நடத்தியவர்களை தகாத வார்த்தைகளால் பேசினார். தட்டிக்கேட்ட டூரிஸ்ட் மற்றும் வியாபாரியை தாக்கி, மிரட்டி விட்டு சென்றார். மாவட்ட வன அலுவலர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பில்லர் ராக் பகுதி சிறு வியாபாரிகள் வலியுறுத்தினர்.