உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / சொத்து தகராறில் தங்கை, கணவர் வெறிச்செயல் |Plan to kill brother | sister, hudband jail

சொத்து தகராறில் தங்கை, கணவர் வெறிச்செயல் |Plan to kill brother | sister, hudband jail

சொத்து தகராறில் தங்கை, கணவர் வெறிச்செயல் |Plan to kill brother | sister, hudband jail | dindigul திண்டுக்கல் மாவட்டம் விருவீடு சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வனராஜா, வயது 40. இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இவரது தங்கை நித்தியா வயது 33. தனது அண்ணன் வனராஜாவிடம் நிலத்தை தனக்கு எழுதி வைக்கும்படி 2022 ம் ஆண்டு கேட்டார். வனராஜா தர மறுத்தார். ஆத்திரமடைந்த நித்தியா, கணவர் ராஜேசுடன் வந்து துாங்கிக் கொண்டிருந்த வனராஜாவை அரிவாளால் வெட்டி, உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார். சுதாரித்து கொண்ட வனராஜா அக்கம் பக்கத்தினர் உதவியோடு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனார். இவ்வழக்கில் நித்தியா, ராஜேஷ் ஆகியோரை விருவீடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகள் ராஜேசுக்கு 8 ஆண்டு சிறை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம், நித்தியாவிற்கு 15 ஆண்டு சிறை மற்றும் 11,500 ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது. அரசு தரப்பு வழக்கறிஞராக குமரேஷன் ஆஜரானார்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை