மாநில போட்டிக்கு வீரர்கள் தேர்வு | players selection for state level competition
திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் 19 வது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியை தேசிய நடுவர் ஜெயசீலன், திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவர் கமலஹாசன் துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சப் சீனியர் போட்டியில் பூம் சே மற்றும் குறுக்கி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சப் சீனியர்கள் 11 பிரிவின் கீழும், சீனியர்கள் 8 பிரிவின் கீழும் விளையாடினர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் வீரர் வீராங்கனைகள் திருச்சியில் நடைபெறும் மாநில தேக் வோண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.