/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  திண்டுக்கல் 
                            / சில்லறை பிரச்னைக்கு குட்பை | QR, ATM fare payment facility in govt bus | TN                                        
                                     சில்லறை பிரச்னைக்கு குட்பை | QR, ATM fare payment facility in govt bus | TN
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக கியூ ஆர் கோடு மற்றும் ஏ.டி.எம். கார்டு மூலம் கட்டணம் செலுத்த நவீன மிஷின்கள் அறிமுகமாகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நெடும்துாரம் பயணிக்கும் பயணிகள் பணம் இல்லாமல் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் அலைபேசிகள் மூலம் கூகுள் பே, போன் பே, பே.டி.எம். போன்ற பணப்பரிமாற்றம் செயலிகளை பயன்படுத்தி டிக்கெட்டுக்கான பணத்தை எளிதில் அனுப்பு பயனடையலாம். இதனால் பயணிகள் பணம் மற்றும் சில்லரை தட்டுப்பாடின்றி சுலபமாக பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டர்கள் பயணிகளிடம் பெறும் பணத்திற்கு மீதி சில்லறை வழங்குவதற்கு இனி சிக்கல் இருக்காது.
 பிப் 12, 2025