உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / ரயில் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்ற பலே ஆசாமி | Sale of Train tickets | One Arrest | Dindigul

ரயில் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்ற பலே ஆசாமி | Sale of Train tickets | One Arrest | Dindigul

திண்டுக்கல் முத்துநகரை சேர்ந்தவர் கண்ணன் வயது 56. இவர் முத்துநகர் பகுதியில் நெட் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வந்தார். இவர் கடந்த ஆறு மாதமாக ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி. யிடம் உரிமம் பெறாமல் முன்பதிவு செய்ய வரும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்து டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து வந்தார். இதனால் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டது. இந்த மோசடி குறித்து டில்லியில் ஐ.ஆர்.சி.டி.சி. தலைமை நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதையடுத்து மதுரை மற்றும் திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்ணனை கைது செய்து கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !