கொடை தொழிலாளிக்கு சிறை | sexual harassment | imprisonment for the criminal | Dindigul
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை கும்பூர் அஞ்சுரான்மந்தையை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமராஜ் வயது 53. இவர் 2023ல் அதே பகுதியில் வசித்து வந்த நெதர்லாந்தை சேர்ந்த 15 வயது இரட்டை சகோதரிகளுக்கு தமிழ் கற்று கொடுப்பதாக கூறி அவர்கள் வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமிகள் இருவரும் கூச்சலிட அவர்களது பெற்றோர் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் ராமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி ராமராஜூக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை, 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன், தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.