உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / மூச்சுத்திணறடிக்க செய்து கொலை செய்த கொடுமை Sexual harassment of an elderly woman

மூச்சுத்திணறடிக்க செய்து கொலை செய்த கொடுமை Sexual harassment of an elderly woman

மூச்சுத்திணறடிக்க செய்து கொலை செய்த கொடுமை Sexual harassment of an elderly woman கொடைக்கானல் பெருமாள்மலை ஆனைகிரியை சேர்ந்த சிதம்பரம் மனைவி தனபாக்கியம் வயது 71. இவர் கடந்த மே 1ம் தேதியன்று பெருமாள்மலைக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்கி திரும்பியுள்ளார். அவர் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பெருமாள்மலை மற்றும் பல பகுதிகளில் இரவு முழுவதும் தேடினர். காலையில் ஆனைகிரி வனப்பகுதியில் தனபாக்கியம் உடலில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். கொடைக்கானல் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். மேல்மலை கிராமம் பழம்புத்தூர் பட்டாளம்மான் தெருவை சேர்ந்த பெரியகருப்பனை வயது 27, பிடித்து விசாரித்தனர். மூதாட்டியை கொடுரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. கொடைக்கானல் போலீசார் பெரியகருப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மே 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை