உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / ஒளிவட்டம் ஏன் நிகழ்கிறது வானியல் வல்லுனர்கள் சொல்வது என்ன

ஒளிவட்டம் ஏன் நிகழ்கிறது வானியல் வல்லுனர்கள் சொல்வது என்ன

ஒளிவட்டம் ஏன் நிகழ்கிறது வானியல் வல்லுனர்கள் சொல்வது என்ன | Dindigul | Halo around the sun a rare phenomenon appeared in the sky திண்டுக்கல்லில் 2 நாள் மழைகுப் பிறகு இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றிலும் ஒளி வட்டம் தோன்றியது. இதனால் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது. வட்டத்தின் விளிம்பில், வானவில் தோன்றும்போது ஏற்படும் நிறங்கள் சூழ்ந்திருந்தன. திடீரென வானில் இந்த மாற்றத்தைக் கண்ட திண்டுக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் தெருக்களில் திரண்டு இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசித்தனர். ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று வானில் தோன்றிய இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்ததோடு படம் எடுத்தனர். இந்த நிகழ்வு 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. வானில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கும்போது, சூரிய ஒளி 22 டிகிரியில் விழுந்தால் ஒளிச்சிதறல் ஏற்படும். அப்போது சூரியனைச் சுற்றிலும் இதுபோன்ற வளையம் ஏற்படும். இதேபோல நிலவிலும் வளையம் தோன்றும். இது ஒளிச்சிதறலின் பரிணாமம் என்கின்றனர் வானியல் ஆய்வாளார்கள்.

மே 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !