/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ காப்பு கட்டுதல் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு | Sri Peria Mariamman temple festival
காப்பு கட்டுதல் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு | Sri Peria Mariamman temple festival
காப்பு கட்டுதல் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு / Sri Peria Mariamman temple festival | Ananthagiri | Kodaikanal கொடைக்கானல் ஆனந்தகிரி ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் திருவிழா நிகழ்ச்சி துவங்கியது. விழாவையொட்டி கணபதி ஹோமம் மற்றும் கோமாதா பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. வரும் 13 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து மண்டக்கப்படிகளில் அம்மன் எழுந்தருள்வார். வரும் 22ம் தேதி அக்னிசட்டி, பறவை காவடி, பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். வரும் 28ம் தேதி மறு பூஜை, பாலபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழு செய்து வருகிறது.
மே 08, 2024