டை பிரேக்கர் முறையில் முடிவு அறிவிப்பு | State level football tournament | Dindigul
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாவட்ட விளையாட்டு அரங்கில் 13ம் ஆண்டு மாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. மூன்று நாட்கள் நடந்த போட்டிகளில் பொது பிரிவு மற்றும் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் 50 அணிகள் பங்கேற்றனர். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டது. சீனியர் பிரிவில் டை பிரேக்கர் முறையை தொடர்ந்து சடன் டெத் முறையில் திண்டுக்கல் கேஎஃப்சி அணியினர் குறிப்பிட்ட நேரத்தில் முதல் கோல் அடித்து அசத்தல் வெற்றி பெற்றனர் திண்டுக்கல் பிரபு மெமோரியல் அணி இரண்டாம் பரிசு பெற்றது 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் திண்டுக்கல் கேஎஃப்சி அணியினர் முதலிடத்தையும் மதுரை லேனா அணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றனர் முதல் பரிசு முப்பதாயிரம், இரண்டாம் பரிசு 20 ஆயிரம் மற்றும் மூன்றாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பையும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை திண்டுக்கல் கேஎஃப்சி கால்பந்து கழக குழுவினர் செய்தனர்