உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திண்டுக்கல் / தட்டிக்கேட்டால் கபாலம் ஓப்பன்ஆகும் என ரவுடிகள்எச்சரிக்கை |temple land encroachment issue|Kodaikanal

தட்டிக்கேட்டால் கபாலம் ஓப்பன்ஆகும் என ரவுடிகள்எச்சரிக்கை |temple land encroachment issue|Kodaikanal

தட்டிக்கேட்டால் கபாலம் ஓப்பன் ஆகும் என ரவுடிகள் எச்சரிக்கை / temple land encroachment issue/ Kodaikanal கோயில் சொத்து குல நாசம்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா இப்போ நிலம தலைகீழா மாறி, கோயில் நிலத்தை வளைச்சு போட்டு சொகுசு வாழ்க்கை வாழ ஆசபடுறவங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. தமிழ்நாட்ல பல கோடி ரூபா மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுருக்கு. குறிப்பா கிராமத்து பகுதியில அதிகளவுல கோயில் நில அபகரிப்பு ஜோரா நடக்குது. அந்த லிஸ்ட்ல இப்போ கொடைக்கானல் பள்ளங்கி கிராமத்துல ஒரு பிரச்சினை பெருசா தலதுாக்கியிருக்கு. கொடைக்கானல் பள்ளங்கி கிராமத்துல பழமையான புதுநாச்சி அம்மன் கோயில் இருக்கு. கிராம மக்கள் அம்மன பல தலைமுறையா கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க. இந்த கோயிலுக்கு சொந்தமான ஒன்றரை கோடி ரூபா மதிப்புள 51 சென்ட் இடத்தை ஒரு தனி நபர் ஆக்கிரமிச்சிருக்காரு. கோயில் நிலத்த மீட்க கிராம பொது மக்கள் அதிகாரிங்க கிட்ட பலமுறை மனு கொடுத்தாங்க. பட் நோ யூஸ். நொந்து போன மக்கள் CM cell வழியா கம்ப்ளைன்ட் பண்ணிருக்காங்க. ஆஃபீஸர்ஸ் அந்த மனுவ படிச்சாங்களோ இல்லையோ தெரியல. மனுவ அப்டியே துாக்கிக் குப்பத் தொட்டியில போட்டுட்டதா பேச்சு அடிபடுது. ஊர்ல முக்கிய கோயிலா இருக்குற புதுநாச்சி அம்மனுக்கு பல வருஷமா திருவிழா நடக்கல இந்த வருஷம் திருவிழா நடத்த ஆசப்பட்டு, பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயற்சி பண்ணிருக்காங்க. அங்க இருந்த அடி ஆளுங்க உருட்டுக் கம்புகள துாக்கிட்டு வந்து பொதுமக்களப் பாத்து ‛தலைல ஒரே அடி தான் கபாலம் ஓப்பன் ஆயிடும்,ன்னு சொல்லி கொல மிரட்டல் விடுத்து தெனாவெட்டா பேசியிருக்கானுங்க. கோயில் நிலத்த மீட்டு கொடுக்குற வர அமைதி வழி போராட்டம் நடத்துவோம்னு கிராம மக்கள் முடிவு பண்ணிருக்காங்க. நாலு வருஷமா கிடைக்காத கோயில் நிலம், நடுத்தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துனாதான் கிடைக்கும் போலனு சமூக ஆர்வலர்கள் நொந்துக்கிட்டாங்க.

ஆக 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை