புலி நடமாட்டம் குறித்து வனத்துறை எச்சரிக்கை | Tiger movement in kodaikanal | Forest department alert
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே கீழ்குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர் தேக்கம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானல் நகராட்சி சார்பில் நீர் தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு சில நாட்களுக்கு முன் காட்டு யானைகள் முகாமிட்டன. தற்போது ஒற்றை புலி ஒன்று நீர்த்தேக்கம் பகுதியில் ஹாயாக உலா சென்றது. புலி நடமாடுவது குறித்து நகராட்சியின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. வனத்துறையினர் கூறுகையில் இப்பகுதியில் புலி நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இப்பகுதி 1680 ஹெக்டேர் வனப்பகுதி என்பதால் புலி வசிப்பதற்கு உண்டான சூழல் உள்ளது. கீழ்குண்டாறு நீர் தேக்கம் சென்று வரும் நகராட்சி பணியாளர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் சென்று வரும்படி வனத்துறை அறிவுறுத்தியது.