பயன்பாட்டிற்கு வராத குளிர்சாதன கிடங்கு | Tomatoes left on the plant without a price | vedasanthur
பயன்பாட்டிற்கு வராத குளிர்சாதன கிடங்கு / Tomatoes left on the plant without a price / vedasanthur / dindigul திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை, தக்காளி, கத்தரி , வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற குறிப்பிட்ட பயிர் வகைகளை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். நவம்பர், டிசம்பரில் தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த 60 நாட்களில் தக்காளி அறுவடைக்கு வர ஜனவரி, பிப்ரவரியில் ஓரளவு விலை இருந்தது. மார்ச் துவங்கியதில் இருந்தே போதிய விலை இல்லை. விவசாயிகள் கொண்டு செல்லும் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி குறைந்தது 40 முதல் அதிகபட்சமாக 80 வரை தான் விற்கிறது. விலை கட்டுபடியாகாமல் தக்காளி பறிப்பதை தவிர்த்து செடியிலே விட்டுவிட்டனர். தக்காளிக்கு போதிய விலை இல்லாத நிலையில் கிராமங்களில் வாகனங்களில் கொண்டு சென்று 8 கிலோ தக்காளியை 50 ரூபாக்கு வியாபாரிகள் விற்று வருகின்றனர். தக்காளி விவசாயத்தில் கூடுதலான விவசாயிகள் ஈடுபட்டதும் விலை குறைவிற்கு ஒரு காரணம் ஆகும். தக்காளி விவசாயிகளின் நலன் கருதி கூடுதலாக உற்பத்தி ஆகும் தக்காளியை சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கும் வகையில் சேமிப்புக் கிடங்குகளை புதிதாக அமைக்க வேண்டும். ஏற்கனவே உள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என தக்காளி விவசாயிகள் வலியுறுத்தினர்.