காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய பழங்குடிகளை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவிப்பு
காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய பழங்குடிகளை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவிப்பு | Tribes caught in river floods | Kodaikanal கொடைக்கானல் மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாத சின்னூர் மற்றும் பெரியூர் மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெரியகுளம் சோத்துப்பாறை மலை வழியாக 15 கிலோ மீட்டர் சென்று வருகின்றனர். கல்லாறு பகுதியில் கன மழை பெய்து காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெரியகுளம் சென்று விட்டு மாலையில் பழங்குடியினர் பத்துக்கும் மேற்பட்டோர் மலை வழியில் ஊர் திரும்பினர். கல்லாறை அடுத்து குப்பம்பாறை ஆற்றை 7 பேர் கடந்து சென்றனர். மூன்று பேர் ஆற்றை கடக்க முயன்றபோது கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் சிக்கினர். ஒரு வழியாக ஆற்றின் நடுவே இருந்த மரத்தில் ஏறி உயிர் தப்பினர். அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். கல்லாறில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் ஆற்றை கடக்க முடியவில்லை. அதிகாலை 1 மணிக்கு தண்ணீ்ர குறைந்தது. அதைத் தொடந்து கல்லாற்றை வீரர்கள் கடந்தனர். கிராம மக்கள் சிலர் உதவியுடன் கயிறு கட்டி குப்பம்பாறை ஆற்றில் சிக்கிய மூவரையும் வீரர்கள் அதிகாலை 1 மணிக்கு மீட்டனர். வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த அடர்ந்த வனத்தில் ஒரு வழியாக அதிகாலை 3 மணிக்கு பழங்குடியினர் அங்கிருந்து புறப்பட்டு ஊர் திரும்பினர். மழை பெய்யும் போதெல்லாம் சின்னுார் பகுதியில் உள்ள சிறு ஆறு, கல்லுாறு, குப்பம்பாறையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பழங்குடிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைகிறது. எனவே பழங்குடியினர் வாழ்வாதாரம் கருதி இப்பகுதியில் அரசு சிறு பாலங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என