/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ விதிமீறி வெடிகுண்டு தயாரித்ததால் நேர்ந்த சோகம் | Two people were killed in the explosion | Dindigul
விதிமீறி வெடிகுண்டு தயாரித்ததால் நேர்ந்த சோகம் | Two people were killed in the explosion | Dindigul
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் செல்வம். ஆவிச்சிபட்டி அருகே பூலா மலை அடிவாரத்தில் இவரது தோட்டம் உள்ளது. இங்கு பாறைகளை தகர்ப்பதற்காக வைக்கப்படும் வெடிகள் அரசு அனுமதியின்றி தயாரிக்கப்பட்டு வந்தது. வழக்கம்போல வெடி தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்து சிதறின. இதில் இருவர் உடல் சிதறி பலியாகினர். நத்தம் போலீசார் உடல்களை மீட்டு விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆக 25, 2024