மனைவிக்கு ₹ 47.38 கோடி அசையும் சொத்து; ₹.22.60 கோடி அசையா சொத்து | Erode | ADMK candidate 583 crore
மனைவிக்கு ₹ 47.38 கோடி அசையும் சொத்து; ₹.22.60 கோடி அசையா சொத்து | Erode | ADMK candidate 583 crore assets ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் சொத்து மதிப்பு 583 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அசோக்குமார் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவரது சொத்து பட்டியலை இணைத்து இருந்தார். அதில் தனது கையிருப்பில் 10 லட்சம் ரூபாய், மனைவி கையிருப்பில் 5 லட்சம் ரூபாய் உள்ளதாகவும், தனது வங்கி கணக்குகளில் 6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய், மனைவி வங்கி கணக்குகளில் 3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இருப்பு உள்ளது. தன்னிடம் 10.1 கிலோ தங்க நகைகள், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகைகள் உள்ளன. தன்க்கு 526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்து மற்றும் 56 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்கள் என மொத்தம் 583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பு சொத்துக்கள் உள்ளன. மனைவிக்கு 47 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்து மற்றும் 22 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. கணவன், மனைவி பெயர்களில் வாகனங்கள் இல்லை. அசோக்குமார் பெயரில் 12 லட்சம் ரூபாய் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.