உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / ஈரோடு / பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பண குவியல்-பரபரப்பு Erode GST Intelligence Team Raid | Viral Video

பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பண குவியல்-பரபரப்பு Erode GST Intelligence Team Raid | Viral Video

பழைய இரும்பு வியாபாரி வீட்டில் பண குவியல்-பரபரப்பு Erode GST Intelligence Team Raid | Viral Video ஈரோடு கிராமம் ஒண்ணுல பழைய இரும்பு வியாபாரி வீட்ல குவியல் குவியலா பணக்கட்டு இருக்கிறத பார்த்து ரெய்டு வந்த அதிகாரிகளே மிரண்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கு. ப்ரத் ஈங்கூர் பக்கத்துல இருக்கிற எல்லைமேடு ஊரை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி செல்வகுமார். 6 வருஷமா ஜிஎஸ்டி கட்டாத இவர் வீட்டுல, அந்த டிப்பார்ட்மென்டோட இன்டலிஜென்ஸ் டீம் ஆபீசர்ஸ் திடீரென ரெய்டுக்கு வந்தாங்க. அதிகாரிகள் வந்ததை பார்த்ததுமே, உடம்பு சரி இல்லணு கூறி பெருந்துறை மெடிக்கல் காலேஜ் ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆனாரு இரும்பு வியபாரி. பின்வாங்காத ஆபிசர்ஸ் டீம், செல்வகுமார் வீட்ட திறந்து மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டாங்க. கட்டு கட்ட பணம் இருந்ததை பார்த்து அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க. கொஞ்சம் நஞ்சமல்ல... இரும்பு வியாபாரி வீட்ல 8 கோடி ரூபா பணம் இருந்துச்சு. ஜிஎஸ்டி தான் சரியா கட்டலணு பார்த்தா, வருமான வரியும் கட்டல. இதனால் ஐடி டீமும் ஸ்பாட்டுக்கு வந்தாங்க. ஆஸ்பிட்டல் ட்ரீட்மென்ட் முடிஞ்சி வீட்டுக்கு வந்த செல்வகுமார்கிட்ட அதிரடி விசாரணை நடக்குது. ஏது இவ்வளவு பணம்... ஏன் ஜிஎஸ்டி கட்டல... ஐடியும் சரியா கட்டலையே ஏன்?ணு கேள்வி மேல கேள்வி கேட்டு அதிகாரிங்க ரவுண்டு கட்டிட்டாங்க. 8 கோடி ரூபாய் பணத்த கைப்பற்றிய டீம், தொடர்ந்து விசாரிச்சிட்டு வர்றாங்க. இந்த சம்பவம் ஈங்கூர் ஏரியால பரபரப்ப ஏற்படுத்திருக்கு.

ஜூலை 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ