வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை | man death | de-addiction centre sealed
திருக்கோவிலூர் அருகே உள்ளது குச்சிபாளையம் ஐயப்பன் நகர். இப்பகுதியில் லோட்டஸ் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் மற்றும் மனநல மருத்துவமனை உள்ளது. ஜா.சித்தாமூர் கிராமத்தில் வசிக்கும் பொன்முடி என்பவர் மதுவுக்கு அடிமையானதால் இந்த மையத்தில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு பொன்முடிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பொன்முடி இறந்தார். பிரேத பரிசோதனையில் பொன்முடி உடலில் காயங்கள் இருந்தது உறுதியானது. இதையடுத்து லோட்டஸ் பவுண்டேஷன் மீது நடவடிக்கை எடுக்க டாக்டர்கள் போலீசாரை கேட்டுக் கொண்டனர். விசாரணை நடத்திய வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்து உரிமையாளர் உட்பட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.