ஐடி, நகராட்சி ஊழியர்கள் வீட்டில் 18 பவுன், 2 கிலோ வெள்ளி கொள்ளை | Gold Theft | Ulundurpet
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை முனுசாமி நகரில் வசித்து வருபவர் சதீஷ்குமார். நகராட்சி தற்காலிக ஊழியர். நேற்று வீட்டில் யாரும் இல்லை. சதீஷ்குமாரும் இரவு பணிக்கு சென்று விட்டார். இன்று காலை வீட்டுக்கு வந்த போது, கதவு பூட்டு உடைந்து திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி திருடு போய் இருந்தது. இதே போல் பக்கத்தில் வசிக்கும் ஐடி ஊழியர் தமிழ்வேந்தன் வீட்டிலும் திருட்டு நடந்து இருந்தது. அங்கு 6 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்களை ஆசாமிகள் அள்ளி சென்றிருந்தனர். 2 கொள்ளை சம்பவங்கள் குறித்தும் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒரே கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.