கல்வராயன்மலையில் டாஸ்மாக் மது விற்பனை விர்ர் | kalvarayan hills tasmac sales thrice
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. வெள்ளிமலை மற்றும் சேராப்பட்டு பகுதியில் இந்த கடைகள் உள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவத்திற்கு முன் இந்த டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை மது விற்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. கள்ளச்சாராய சாவு சம்பவத்திற்கு பின் மலைப்பகுதிகளில் போலீசார் சாராய வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் சாராயம் காய்ச்ச முடியவில்லை. இதையடுத்து டாஸ்மாக் கடைகளை நோக்கி மது பிரியர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். தற்போது இரண்டு கடைகளுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் முதல் 1 லட்சத்து 70 ரூபாய் வரை சரக்கு விற்பனையாகி வருகிறது. விசேஷ நாட்களில் மது விற்பனை 3 லட்சம் ரூபாய் வரை அதிகரித்து வருகிறது. மது விற்பனை மூலம் குடிமகன்கள் வயிற்றில் டாஸ்மாக் பீர் வார்க்கிறது. சரக்கு விற்பனை எகிறி வருவதால் டாஸ்மாக் அதிகாரிகள் வயிற்றில் குடிமகன்கள் பால் வார்க்கின்றனர்.