நடிகை ரோஜா தரிசனம் | Chelliamman Temple Actress Roja
காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் குருக்கள் தலைமையில் நடைபெற்றன. கடம் புறப்பாடு முடிந்து மங்கள மேளம் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மே 19, 2024