/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ மார்ச் 14ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும் | Kamakshi Masi utsav | Kanchipuram
மார்ச் 14ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும் | Kamakshi Masi utsav | Kanchipuram
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத உற்சவம் மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தின் 5ம் நாள் உற்சவர் காமாட்சி அம்மன் ஒன்பது தலை நாக வாகனத்தில் அருள்பாலித்தார். பச்சை பட்டு உடுத்தி மனோரஞ்சிதம் மலர் அலங்காரத்தில், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுடன் உற்சவர் காமாட்சி நாக வாகனத்தில் பிரவேசித்தார். மேள தாளம் முழங்க ராஜவீதிகளில் நாக சேவை நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 11ம் தேதி மற்றும் விடையாற்றி உற்சவம் மார்ச் 14ம் தேதி நடைபெறும்.
மார் 08, 2025