உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / காஞ்சிபுரம் / ட்ட நெரிசலை தவிர்க்க உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளல் | Kanchipuram | Kumarakottam Murugan Temple

ட்ட நெரிசலை தவிர்க்க உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளல் | Kanchipuram | Kumarakottam Murugan Temple

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் பால்க்காவடி, பூக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்ட நெரிசலை தவிர்க்க உற்சவர் முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபத்தில் எழுந்தருளினார் சின்னக் காஞ்சிபுரம் சௌராஷ்டிர சமூகத்தை சேர்ந்த ஸ்ரீ பாலமுருகன் குழுவினர் 190 வது ஆண்டாக மயில்க்காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சிவாச்சாரியார் கே.ஆர்.காமேசுவர குருக்கள் தலைமையில் சிறப்பு பாலாபிஷேகமும் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கதிரவன் தலைமையில் கோயில் பூஜகர்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை