கழிவுகள், உதிரிபாகங்களில் இருந்து கிளம்பும் விண்ணை முட்டும் புகை மண்டலம்
கழிவுகள், உதிரிபாகங்களில் இருந்து கிளம்பும் விண்ணை முட்டும் புகை மண்டலம் | Kanchipuram | Major Fire | Car Manufacturing Plant காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள HYUNDAI Mobis தொழிற்சாலையின் பின்பகுதியில் இருந்த கழிவுகள் மற்றும் உதிரிபாகங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களை உடனடியாக வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இங்கிருந்து உண்டாய் கார் தொழிற்சாலைக்கு கார் உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலையில் பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள், உற்பத்தி இயந்திரங்கள், தீயில் எரிந்து சேதம் அடைந்தன. ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.