50க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தம் | sanitary workers protest
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 350க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தினர்.
செப் 24, 2024