மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவு நாளில் திக்திக்
மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவு நாளில் திக்திக் / Sriperumbudur / SI narrowly escapes death at tribute ceremony மறைந்த பிரதமர் ராஜீவ் நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள நினைவுத்தூண் முன் உயிர் நீத்த காவலர்களுக்கு ஏடிஎஸ்பி மார்டீன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. காவலர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வானத்தை நோக்கி 3 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எஸ்ஐ தெய்வசிகாமணி கமாண்ட் கொடுத்தார். கான்ஸ்டபிள் ஒருவர் கமாண்ட் வருவதற்கு முன்பே திடீரென வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு கவனக்குறைவாக சுட்டுவிட்டார். சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதில் எஸ்ஐ தெய்வசிகாமணி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். துப்பாக்கியை சற்று கீழே சாய்த்து சுட்டிருந்தால் எஸ்ஐ தெய்வசிகாமணி உயிரிழந்திருப்பார். நல் வாய்ப்பாக எஸ்ஐ தெய்வசிகாமணி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.