/ மாவட்ட செய்திகள்
/ காஞ்சிபுரம்
/ இளம் வயதில் சினிமா ஒளிப்பதிவாளர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு | Tamil cinema | Kanchipuram
இளம் வயதில் சினிமா ஒளிப்பதிவாளர் மரணம்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு | Tamil cinema | Kanchipuram
காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தை சேர்ந்தவர் கோபி வயது 22. சினிமா உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். படுகாயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். உடல் உறுப்பு தானம் செய்த பிறகு அவரது உடல் கிளார் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடந்தது. கோபி உடலுக்கு எம்பி செல்வம், காஞ்சி எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஜன 19, 2024