₹40 கோடி வரிப்பணத்தைவீணடிக்கும் மாநகாராட்சி பணியாளர்கள்
₹40 கோடி வரிப்பணத்தை வீணடிக்கும் மாநகாராட்சி பணியாளர்கள் | Kanchipuram | Yellow Water Canal|Sewage dumping staff காஞ்சிபுரம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய பிஎஸ்கே தெரு மற்றும் நத்தப்பேட்டை ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளது. கழிவுநீரை அகற்ற மாநகராட்சியில் ஒரு வாகனம் மட்டுமே உள்ளது. கூடுதலாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வரும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்யாமல் 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மஞ்சள் நீர் கால்வாயில் மாநகராட்சி ஊழியர்களே கொட்டி அசுத்தம் செய்வது தொடர்கிறது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டு வரும் கால்வாயில் பணிகள் முடிவடைவதற்குள் மாநகராட்சி ஊழியர்கள் கழிவு நீரை கொட்டி கால்வாயை சீரழித்து வருவது வேதனைக்குரியது என மக்கள் தெரிவித்தனர். நன்னீர் கால்வாயை அசுத்தம் செய்யும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துணை போகும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.