உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / குழித்துறை ரயில்வே ஸ்டேஷன் விழாக்கோலம் பூண்டது | Kanyakumari | BJP members welcome the Amrit Bharat

குழித்துறை ரயில்வே ஸ்டேஷன் விழாக்கோலம் பூண்டது | Kanyakumari | BJP members welcome the Amrit Bharat

குழித்துறை ரயில்வே ஸ்டேஷன் விழாக்கோலம் பூண்டது | Kanyakumari | BJP members welcome the Amrit Bharat train. கேரளா அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடி இன்று ரயில் சேவைகளை துவங்கி வைத்தார். நடந்து முடிந்த திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெல்லும். அப்படி நடந்தால் 45 நாட்களில் பிரதமர் மோடி கேரள வளர்ச்சிக்கான திட்டங்களை நேரில் வந்து துவக்கி வைப்பார் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திர சேகர் அறிவித்திருந்தார். மக்கள் ஆதரவோடு திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று திருவனந்தபுரம் வந்தார். புதிய ரயில் சேவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மோடி துவக்கி வைத்த ரயில் தமிழக கேரளா எல்லையான குழித்துறை வந்தது. அங்கு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் 500 மேற்பட்டோர் ரயிலுக்கு வரவேற்பு அளித்தனர்.

ஜன 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை