உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / கன்னியாகுமரி - நாகபட்டினம் வரை கடலில் கனிம சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல்

கன்னியாகுமரி - நாகபட்டினம் வரை கடலில் கனிம சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல்

கன்னியாகுமரி - நாகபட்டினம் வரை கடலில் கனிம சுரங்கம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் | marine mineral mining | fishermen protest | TN மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வரவிட மாட்டோம் என சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கடலில் காற்றாலை அமைக்கவும், கனிம வளங்கள் எடுப்பதற்கும் அனுமதி கொடுத்தது ஏன்? என்று தேசிய பாரம்பரிய மீனவர்கள் சங்க மாநில தலைவர் சின்னதம்பி கேள்வி எழுப்பியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஆரம்பத்தில் அதரவாக செயல்பட்ட தமிழக அரசு மக்களின் எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது. சுரங்கம் செயல்பட விடமாட்டோம் என சொல்லும் முதல்வர் ஸ்டாலின், தமிழக கடலில் கனிமம் தோண்ட அனுமதி வழங்கி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்த பின், கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் சுரங்கம் போன்றவற்றுக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது. கடலில் கனிம சுரங்கம் தோண்டும்போது, பல நூறு கிலோ மீட்டர் கடல் வளம் முழுவதும் அழிந்து விடும். கடலியல் சூழல் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். கடலை நம்பி வாழும் 60 லட்சம் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். கடலியல் சமன்பாடு சிதைக்கப்படும்போது, இயற்கை பேரழிவை தடுக்க முடியாமல் போகும். எனவே, கன்னியாகுமரியில் கடல் சுரங்கத்திற்கான அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தேசிய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் சின்னதம்பி வலியுறுத்தி உள்ளார்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ