உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / கேரள வாகன ஓட்டிகள் மீண்டும் கைவரிசை | Kanyakumari | Meat waste from Kerala

கேரள வாகன ஓட்டிகள் மீண்டும் கைவரிசை | Kanyakumari | Meat waste from Kerala

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை லாரிகளில் ஏற்றி வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் மற்றும் விளை நிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் டன் கணக்கில் கொட்டி வருகின்றனர். இது தொடர்பாக பசுமை தீர்பாய உத்தரவின் பேரில் தமிழக பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் மீண்டும் கேரள வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது. செக்போஸ்டுகளில் கடுமையான சோதனைக்கு பி்ன்னரே கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தமிழகம் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகள் செக்போஸ்ட் போலீசாரிடம் சிக்காமல் தவிர்க்க நெடுஞ்சாலையை தவிர்த்து குமரி மாவட்டம் புதுக்கடை அருகே கைசூண்டி வழியாக நாகர்கோவில் நோக்கி சென்றது. அந்த வாகனங்கள் கடந்து செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் புதுக்கடை போலீசாருக்கு தகவல் கொடுத்னர். விரைந்து வந்த போலீசார் இரண்டு லாரிகளையும் மடக்கி பிடித்தனர். அதில் அழுகிய மீன்கள், கோழி மற்றும் மாட்டிறைச்சியின் கழிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த தீபு, நந்து மற்றும் அஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு லாரிகளையும் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

டிச 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ