குழித்துறை பாஜக நையாண்டி பேனர் | Kanyakumari | Nagercoil Thiruvananthapuram National Highway
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை நீரும், கழிவு நீரும் குளியில் தேங்கி தெப்பம் போல் காட்சியளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து காயமடைந்து வருவது வழக்கமாகி விட்டது. குழிகளை மூடக்கோரி அனைத்து கட்சி சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குழித்துறை நகர பாஜ சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய நெடுஞ்சாலையில் குழிகளில் தேங்கிய நீரில் மீன் வளர்க்க, குளிக்க, கால்நடைகளுக்கு தனி படித்துறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கிண்டலடித்து வைக்கப்பட்ட பேனர் பேசு பொருளாகி உள்ளது.