உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கன்னியாகுமரி / வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி | Regional volleyball tournament| kanyakumari

வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி | Regional volleyball tournament| kanyakumari

வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி / Regional volleyball tournament/ kanyakumari கன்னியாகுமரி ஆலம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. அண்டர் 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி வெற்றி பெற்றது. 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் புனித மரியன்னை மேல்பாலை பள்ளி முதல் பரிசு பெற்றது. வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற இளம் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.

ஆக 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ