தாக்குதல் பற்றி தெரியாது என்கிறார் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் | Media Rights | DMK Fails
தாக்குதல் பற்றி தெரியாது என்கிறார் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் | Media Rights | DMK Fails | Palladam கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் வடக்கு கிராமத்தில் விதிகள் மீது கனிம வளம் கொள்ளை போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இக்குவாரியை ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்தக் குவாரியை கடந்த 2022ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயம் ஆய்வு செய்து 23 கோடியே 55 லட்சம் அபராதம் விதித்தது. எனினும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் போல் கனிம வளம் கொள்ளை படு ஜோராக நடக்கிறது. இகுறித்து கடந்த ஜனவரி 30ம் தேதி செய்தி சேகரிக்கச் சென்ற மீடியா செய்தியாளர்கள், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் மீது 50 க்கும் மேற்பட்ட குண்டர்கள் கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாஜக அண்ணாமலை, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு காரணமான எம்எல்ஏ பழனியாண்டி மற்றும் அவரது கூலிப்படை கும்பல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கிடையே திருப்பூர் பல்லடம் பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். கனிம வளக் கொள்ளை வழக்கு தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பதிலளித்த அமைச்சர், இந்த சம்பவம் குறித்து எனது கவனத்துக்கு வரவில்லை. நான் அந்த செய்தியை பார்க்கவும் இல்லை எனக்கூறி கழுவும் மீனில் நழுவும் மீனாக பதிலளித்தார். நாடே பரபரப்பாக பேசப்படும் கரூர் கனிம வளக் கொள்ளை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என செய்தித்துறை அமைச்சர் கூறியது கடும் சர்ச்சைய ஏற்படுத்தியது.