சீருடை அணிந்து ஆண்கள் பெண்கள் வள்ளி கும்மியாட்டம் | Karur
கரூர் மாவட்டம் காக்காவாடி பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்றம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுமிகள் கோயிலில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். கொங்கு ஒயிலாட்டம் மற்றும் ஈசன் வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் ஒரே வண்ண பாரம்பரிய உடையணிந்து ஒயிலாட்டம் ஆடினர். 100 க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒயிலாட்டம் ஆடினர். திரளான மக்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
ஜன 07, 2024