முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கைது |Karur |land scam case MR Vijayabaskar
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால் கைது | Karur | land scam case MR Vijayabaskar arrested கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் கரூர் எஸ்பி அலுவலகத்தில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை எம்ஆர்விஜயபாஸ்கர் போலீயாக பத்திரப்பதிவு செய்து கொண்டதாக புகார் அளித்தார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எம்ஆர் விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் மனு செய்தார். மனு தள்ளுபடியானது. இதனால் அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில் கேரளாவில் வைத்து விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து அவரை கரூர் அழைத்து வந்து விசாரணை நடத்த வருகின்றனர். விஜயபாஸ்கர் கைதுக்கு அதிமுக பொதுசெயலாளர் பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.