மாஜி அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் வீடு, ஆபீஸ் உட்பட 10 இடங்களில் ரெய்டு | M.R. Vijayabaskar | CBCID
மாஜி அமைச்சர் M.R. விஜயபாஸ்கர் வீடு, ஆபீஸ் உட்பட 10 இடங்களில் ரெய்டு | M.R. Vijayabaskar | CBCID | Karur கரூர் அருகே தோரணகல்பட்டி குன்னம்பட்டி பகுதியில் உள்ள 22 ஏக்கர் நிலம் உள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்பள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது கரூர் மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கர் தலைமறைவாகி விட்டார். இவ்வழக்கு தொடர்பாக கரூரில் விஜயபாஸ்கர் வீடு, சாயப்பட்டறை அலுவலகம், அவரது தம்பி வீடு, எம்.ஆர்.வி டிரஸ்ட் அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் காலை 7 மணி முதல் 2 டி.ஸ்.பி.க்கள் 9 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.