பள்ளி மாணவனிடம் விசாரணை | school girl issue | karur
பள்ளி மாணவனிடம் விசாரணை/ school girl issue / karur கரூர் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவருடன் நட்பாக பழகி உள்ளார். நேற்று இரவு மாணவியை ஃபோனில் தொடர்பு கொண்ட மாணவன், மாணவிக்கு ஒரு பரிசு வைத்திருப்பதாக ஆசை வார்த்தை கூறினான். பரிசை பெற்றுக்கொள்ள அருகில் இருந்த சோளக்கொள்ளைக்கு வருமாறு அழைத்தான். அதை நம்பிய மாணவி சோளக்கொள்ளைக்கு சென்றார். அங்கு மேலும் இரண்டு இளைஞர்கள் இருப்பதை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த மூன்று பேரும் மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. திடுக்கிட்ட மாணவி கூச்சல் போட்டு அலறினார். சத்தம் கேட்டு யாராவது வந்தால் மாட்டிக்கொள்வோம் என பதறிய மாணவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு எஸ்கேப் ஆனார்கள். வலியில் துடித்த மாணவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியை மீட்டு தனியார் ஹால்பிட்டலில் அட்மிட் செய்தனர். பாலவிடுதி போலீசார் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனிடம் விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். பரிசு கொடுப்பதாக கூறி சோளக்கொல்லையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.