திருக்குறள் தெளிவுரை புத்தகம் பரிசு | Karur | Thiruvalluvar Day
கரூர் சீனிவாசபுரம் திருக்குறள் பேரவை செயலாளர் பழனியப்பன் தலைமையில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வாசிப்பு போட்டி நடைபெற்றது. திருக்குறள் தெளிவுரை புத்தகம் மற்றும் பேனா பென்சில்கள் பரிசாக வழங்கப்பட்டது. திருக்குறள் பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்
ஜன 16, 2024