உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் | Krishnagiri | Opening of water in Bambaru Dam

4000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் | Krishnagiri | Opening of water in Bambaru Dam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து ஆயக்கட்டு பாசனத்திற்காக கலெக்டர் சராயு தண்ணீர் திறந்து வைத்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 கிராமங்களைச் சேர்ந்த 2,501 ஏக்கர் நிலங்களும், தருமபுரி மாவட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள 1499 ஏக்கர் என மொத்தம் 16 கிராமங்களில் உள்ள 4000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஆண்டு மழை குறைவாக பெய்த நிலையில் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் பிடிஓக்கள், விஏஓ, மிட்டப்பள்ளி, கொண்டம்பட்டி, மூன்றாம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர்.

பிப் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை