உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கிருஷ்ணகிரி / காலிஃப்ளவரில் கரும்புள்ளி நோய் தாக்குதல் | Krishnagiri | cauliflower crop

காலிஃப்ளவரில் கரும்புள்ளி நோய் தாக்குதல் | Krishnagiri | cauliflower crop

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கருக்கும் அதிகமாக காலிஃப்ளவர் சாகுபடி நடக்கிறது. பருவமழை குறைபாடு மற்றும் கரும்புள்ளி நோய் தாக்குதலால் காலிஃப்ளவர் நிறம் மாறியும், வளர்ச்சி குறைந்தும் மகசூல் இழப்பு ஏற்பட்டது. காலிஃப்ளவர் பயிரிட ஏக்கருக்கு 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மகசூல் இல்லை. அறுவடை செலவு கூட மிஞ்சாது என்பதால் எர்ரகொண்டபாளையம் பகுதியில் டிராக்டர் கொண்டு காலிஃப்ளவர் செடிகளை வயலிலேயே விவசாயிகள் உழுது அழித்தனர். சிலர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு அழித்தனர். கடும் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !