8 நாள் திருவிழாவில் ₹பல கோடி வர்த்தகம் நடைபெறும் | Krishnagiri | Chappalamma Temple Cow festival
கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மசந்திரத்தில் ஸ்ரீ சப்பலம்மா கோயில் மாட்டுத் திருவிழா இன்று துவங்கியது. இவ்விழா 8 நாட்கள் நடைபெறும். விழாவையொட்டி தினமும் 67 கிராம தேவதைகள் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருள்வர். சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் மாட்டுத் திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிகட்டு காளைகளை வாங்க மற்றும் விற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஒரு ஜோடி மாடு ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை விற்பனையானது. மாட்டுத் திருவிழா பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெறும். 8 நாட்கள் நடைபெறும் மாட்டுத் திருவிழாவில் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.