/ மாவட்ட செய்திகள்
/ கிருஷ்ணகிரி
/ ₹40 லட்சம் அபராதம் வசூலிப்பு | high fare omni buses siezed | hosur
₹40 லட்சம் அபராதம் வசூலிப்பு | high fare omni buses siezed | hosur
ஆயுத பூஜையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூளிப்பதாக போக்குவரத்துத்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதைத் தொடர்ந்து இணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் மேற்பார்வையில், ஆர்டிஓக்கள் தலைமையில் தனிப்படையினர் கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் ஆம்னி பஸ்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் வரி செலுத்தாமல் கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு சென்ற 18 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மின்னல் வேகத்தில் சென்ற ஆம்னி பஸ்சை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். விதிமீறலில் ஈடுபட்ட 18 பஸ்களின் உரிமையாளர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. பயணிகள் மாற்று ஏற்பாட்டின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
அக் 11, 2024