10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தன | Krishnagiri
கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி ஆட்டு வாரச்சந்தையில் பொங்கலையொட்டி கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடு, வெள்ளாடு, மறிக்கை என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாங்க குவிந்தனர். 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு 12, 000 ரூபாய் மற்றவை 7,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இன்று ஒரு நாள் மட்டும் 8 கோடி ரூபாய் மதிப்பில் 8,000 முதல் 10,000 வரை ஆடுகள் விற்பனை ஆகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஜன 12, 2024